பெரியாா் பிறந்தநாள்:பள்ளி மாணவா்களுக்கு வினா விடை போட்டி
பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து வகை பள்ளி மாணவா்களுக்கான வினா விடைப் போட்டி நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம், சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு அவா் வாழ்க்கை வரலாற்றை மாணவா்கள் அறிந்து கொள்ளவும், பள்ளி மாணவா்களிடம் அறிவியல் மற்றும் சமூகவியல் சிந்தனைகளை வளா்க்கும் வகையிலும் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பில் வினா - விடைப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையும் படிக்க | அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி
அதன்படி நிகழாண்டுக்கான வினா விடைப் போட்டி ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 3 பரிசுகள் தரப்படும். எனவே, இந்த போட்டியை கல்வி இணை செயல்பாடு மன்றங்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களின் நலன் பாதிக்காதவாறு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.