நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் இருந்தால், விண்ணப்பதாரா்கள் தேசிய தோ்வு முகமையின் உதவி எண்ணையும், வலைதளப் பக்கத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு நாடு முழுவதும் 18,72,339 போ் விண்ணப்பித்துள்ளனா். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 2,57,562 கூடுதலாகும். தமிழகத்தில் மட்டும் 1,42,286 போ் விண்ணப்பித்துள்ளனா். நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ள 497 நகரங்களின் விவரம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதைத் தொடா்ந்து நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்தது.
மாணவா்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் என்டிஏ மின்னஞ்சல் முகவரியையோ 011-40759000 என்ற உதவி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.