மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க மாநில கல்வி கொள்கை முழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கென பிரத்யேகமாக கல்வி கொள்கை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது 2 கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாநிலம் முழுவதும் கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக பொதுமக்கள் அனைவரிடம் கருத்துக்களை பெற இக்குழு முடிவு செய்திருக்கிறது.
அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, அதன் மூலமாக கல்வி கொள்கை வரையறை குழுவானது ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், இதற்கான முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி கொள்கை முழு தகவல் அளித்துள்ளது. மாநில கல்வி கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 27ல் நடைபெற உள்ளது.
Search This Blog
Wednesday, July 13, 2022
Comments:0
Home
Committee structure to implement state education policy
latest tamil news
SEP
மாநில கல்விக்கொள்கை
மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முருகேசன் முழு முடிவு..
மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முருகேசன் முழு முடிவு..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.