தேசிய ஓய்வூதிய திட்டம் 2022: அரசு ஊழியர்கள் பெற்ற வருமானம் என்ன? இதோ முழு விபரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 25, 2022

Comments:0

தேசிய ஓய்வூதிய திட்டம் 2022: அரசு ஊழியர்கள் பெற்ற வருமானம் என்ன? இதோ முழு விபரம்!

அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர்

அரசுப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் 2021- 2022 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கான வருமானம் 6.91% இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது

ஓய்வூதியத்திற்கான சேமிப்பைத் திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System- NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது தனது ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதோடு இத்திட்டம் மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு மற்றும் காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரித்தும் வழங்குகிறது. மேலும் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் சேமிக்கப்படும் எனவும், ஓய்வு பெறும் போது உங்களது குடும்பத்தின் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள், அரசுப்பத்திரங்கள் தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு, அரசுப்பத்திரங்களில் முதலீடு போன்றவற்றில் நம்முடைய பணத்தைச் சேமிக்கும் நடைமுறை உள்ளது.

இதையும் படிக்க | ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

இவை அனைத்தையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவரக்கூடிய நிலையில் இதுவரை அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் என்ன? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது எழுத்துப்பூர்வமான அறிவிப்பில் நிதியமைச்சர் தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர் எனவும் 2021-2022 நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்- ன் கீழ் இவர்களின் வருமானம் 6.91 சதவீதமாக இருந்தது எனக் கூறியுள்ளார். முன்னதாக அரசு ஊழியர்களின் NPS வருமானம் 9.33% ஆகும்.மேலும் 2021-2022 நிதியாண்டிற்கான என்பிஎஸ் வருமானம் பெரும்பாலான கடன் கருவிகளை விடச் சிறந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். பொதுவாக NPS வருமானம் சந்தை நிர்ணயிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில், மூன்று நிதி மேலாளர்களிடையே PFRDA மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் NPS இன் கீழ் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்கிறார்கள், அதாவது அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் கருவிகள், பணச் சந்தை கருவிகள், ஈக்விட்டி சந்தை போன்றவற்றில் முதலீட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு

மேலும் சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு,அரசாங்கத்தின் பங்களிப்பை 10Yo of Pay + DA to 74% of Pay + DA ஆக உயர்த்தியது. ஓய்வூதிய நிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் சந்தாதாரர்களுக்கான முதலீட்டு முறை, பணம் செலுத்துதல் 2004-2012 காலகட்டத்தில் வைப்புத்தொகை செய்யாத அல்லது தாமதமான வைப்புத்தொகைகளுக்கான இழப்பீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு மற்றும் முந்தைய 40 ஆண்டு முதல் 60 வரை வெளியேறும்போது மொத்தமாகத் திரும்பப் பெறுவதற்கான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு செலுத்த வேண்டிய தொகையின் முழுவதுமாக திரும்பப் பெறுதலுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews