தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ம் கல்வி ஆண்டிலிருந்து ரூ.200 தனிக்கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பட்சத்தில் அரசு பள்ளி மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக பயில மாணவர்கள் செலுத்தும் தனிக்கட்டணம் ரூ.200ஐ 2022-23ம் கல்வியாண்டில் இருந்து ரத்து செய்வதன் வாயிலாக ஒவ்வொரு கல்வியாண்டும் 3.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.
எனவே அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தினை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனிக் கட்டணத்தை மாணவர்களின் நலன் கருதி 2022-23ம் கல்வி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்து ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்று அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தினை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக்கட்டணம் ரூ.200 மாணவர்களின் நலன் கருதி 2022-23ம் கல்வி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்து அரசு ஆணையிடுகிறது.
Search This Blog
Wednesday, June 29, 2022
Comments:0
Home
Announcement
Computer Science
computer science Lab
G.O
Government Orders
Hi-Tech Computer Labs
Tamilnadu Government
கணினி அறிவியல் பாட தனி கட்டணம் ரத்து அரசாணை வெளியீடு
கணினி அறிவியல் பாட தனி கட்டணம் ரத்து அரசாணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.