மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்டவற்றின் விபரங்களை ஒருங்கிணைத்து, அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் பெற்று கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் விதமாக, 'என் பள்ளி' (enpalli.com) எனும் இணையதளத்தை உருவாக்கும் முனைப்பில், மாநகராட்சி கல்விக்குழு ஈடுபட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கல்வி, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் குழுவானது, மாநகராட்சி பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து, மாணவர், ஆசிரியர், பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து,
அவற்றை தீர்மானங்களாக நிறைவேற்றி, மாமன்ற கூட்டத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறது.இக்குழு, தங்களது சொந்த செலவில் சென்று ஆய்வு செய்துவரும் நிலையில், நவீன யுகத்தில் இணையதளம் வாயிலாக தேவைகளை கேட்டறிய, enpalli.com எனும் இணையதளத்தை, தனியார் நிறுவனம் வாயிலாக உருவாக்கி வருகிறது.அதன்படி, 'என் பள்ளி' இணையதளத்தில் மாணவர் விபரம், சேர்க்கை, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களின் விபரங்களும் 'அப்லோடு' செய்யப்பட்டு வருகிறது. இது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதுடன், பூங்கா ஆக்கிரமிப்பு உள்ளிட்ட அத்துமீறல்களை தடுக்கவும் உதவும் என்கின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்.கல்விக்குழு தலைவர் மாலதி கூறியதாவது:
மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் தொடக்க, நடுநிலை என, 148 பள்ளிகள் உள்ளன. தவிர, 1,000க்கும் மேற்பட்ட பூங்காக்களுடன், மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள் உள்ளன. 'என் பள்ளி' இணையதளத்தில் தற்போது வரை, 28 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள், 8,000க்கும் மேற்பட்ட சத்துணவு உட்கொள்பவர்கள், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூங்கா பயனாளிகள், 5,400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது, 40 சதவீதத்துக்கும் மேல் புதிய இணையதள பணிகள் முடிந்துள்ளது. மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் விபரமும் இடம்பெறுவதால், பொது மக்கள், கல்வியாளர் உள்ளிட்டோர் தங்களது தேவைகள், குறைகளை சுட்டிக்காட்டுவதுடன், 'ஐடியா'க்களும் பதிவிடலாம். விரைவில் இந்த இணையதளம் முழு பயன்பாட்டு வரவுள்ளதால், கல்வி தரத்தையும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். உள்ளது உள்ளபடி!
பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை இணையதளத்தில் 'உள்ளது உள்ளபடி... அப்படியே காண்பிக்குமாறு' கல்விக்குழுவினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால், தேர்ச்சி, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தகவல்களுடன், பள்ளிகளின் புகைப்படத்துடன் கூடிய கட்டமைப்பு வசதிகளையும் பெற்றோர் இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்பதால், மாநகராட்சி பள்ளிகளின் 'மவுசு' கூடும் என்பதில் சந்தேகமில்லை

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.