அட்வான்ஸ் வரி ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இன்று கடைசி தேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 15, 2022

Comments:0

அட்வான்ஸ் வரி ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இன்று கடைசி தேதி

சம்பளம் இல்லாமல் ஒருவருக்கு வாடகை, பங்கு மூலதனங்களிலிருந்து கிடைக்கும் ஆதாயம், வைப்புத் தொகை வட்டி, லாட்டரி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் வரி செலுத்த வேண்டி இருந்தால், அவர்கள் அந்த வரி தொகையை கணக்கிட்டு நான்கு தவணைகளாக முன் கூட்டியே செலுத்த வேண்டும். முதல் தவணையாக 15% வரித்தொகை செலுத்த இன்று (ஜூன் 15) கடைசி தேதி. தவறும் பட்சத்தில் அத்தொகைக்கு 1% அபராத வட்டி வசூலிக்கப்படும். யார் எல்லாம் இவ்வரி செலுத்த வேண்டும்!

சம்பளதாரர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டினால் அவர்களுக்கு நிறுவனமே வரிப் பிடித்தம் செய்யும். சம்பளதாரர்கள் இல்லாத சுயதொழில் செய்யும் தனிநபர்களான மருத்துவர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர், ஓவியர், நிதி ஆலோசகர்கள் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்து, அவர்கள் செலுத்த வேண்டிய வரி ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருக்குமாயின் அவர்கள் இந்த அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரிக்கான தவணை!

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் எனக் கொள்வோம். அதில் தனிநபர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு வருமான வரி கிடையாது. மேலும் 80சியின் கீழ் ரூ.1.5 லட்சத்துக்கு முதலீடுகள் மேற்கொண்டிருந்தால் அதற்கு விலக்கும் பெறலாம். தற்போது ரூ.8.5 லட்சதுக்கு உங்களுக்கான வரி செஸ் ஆகியவை சேர்த்து ரூ.54,600 ஆகும். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருப்பதால் நீங்கள் இந்த ரூ.54,600-ஐ நான்கு தவணையாக முன் கூட்டியே செலுத்த வேண்டும்.

நிதியாண்டின் முதல் தவணையாக 15 சதவீதத்தை (ரூ.8,190) ஜூன் 15க்குள் செலுத்த வேண்டும். 2ம்தவணையாக செப்., 15-க்குள் 45% வரியை செலுத்த வேண்டும். முதல் தவனையாக 15 சதவீதம் செலுத்தியிருப்போம். அதனுடன் 30% தொகையை (ரூ.16,380) செலுத்த வேண்டும். மூன்றாவது தவனையாக 75% வரியை செலுத்தியிருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே செலுத்தியுள்ள 45% போக 30% தொகையான ரூ.16,380. நான்காம் தவணையாக நிதியாண்டின் மார்ச் 15-க்குள் 100% தொகையை செலுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே மொத்த வரியில் 75% செலுத்தியிருப்போம். அதனால் மீதமுள்ள 25% தொகையான ரூ.13,650 செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரி செலுத்தும் வழிகள்!

முதலில் உங்களின் வரி வருவாயை கணக்கிட்டுக் கொண்டு வருமான வரித்துறை வழங்கும் https://www.tin-nsdl.com/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சர்வீசஸ் பிரிவில் இ-பேமென்ட்: பே டேக்சஸ் ஆன்லைன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் நான் டி.டி.எஸ்/டி.சி.எஸ்., பிரிவின் கீழ் சலான் எண் 280 என இருப்பதை கிளிக் செய்து கேட்கும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து, நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாக அட்வான்ஸ் வரியை செலுத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாதோர் சலான் 280-ஐ பதிவிறக்கம் செய்து வங்கியில் சென்று செலுத்தலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews