கொரோனாவால் இடைநின்ற மாணவர்கள்; உடனடி தேர்வுக்கு கல்வித்துறை ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 16, 2022

Comments:0

கொரோனாவால் இடைநின்ற மாணவர்கள்; உடனடி தேர்வுக்கு கல்வித்துறை ஏற்பாடு

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து உடனடி தேர்வு எழுத செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் 2019--- 2020 மற்றும் 2021ம் ஆண்டு வரை ஊரடங்கால் பள்ளிகள் செயல்படவில்லை. இக்கால கட்டத்தில் மாணவர்கள் சிலர் குடும்ப சூழ்நிலை கருதி பிழைப்பிற்காக திருப்பூர், கோயம்புத்துார் போன்ற தொழில் நகரங்களுக்கு சென்று விட்டனர். ஊரடங்கு தளர்வுக்கு பின் தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. குறிப்பாக பத்து மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் பங்கேற்காமல் 'ஆப்சென்ட்' ஆகினர்.

சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பட்ட அரசு பொது தேர்வில் ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 543 மாணவர்களுக்கு மேல் அரசு பொது தேர்வில் பங்கேற்கவில்லை.இதையடுத்து மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடம், எங்கு உள்ளார்கள் என்பதை அறிந்து குடும்ப தலைவரிடம் பேசி கல்வியின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர் அவர்களை இடைநிற்றல் இன்றி பள்ளியில் சேர செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இடைநிற்றலை தடுக்க திட்டம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. அதில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியலை தயாரித்து அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என அறிய வேண்டும்.

பின்னர் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி சேரும் மாணவர்களுக்கு நன்கு பாடங்களை கற்பித்து ஜூலையில் நடக்க உள்ள உடனடி தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews