பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2022
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பெருமை
குறள் : 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பொருள்:
பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்
பழமொழி :
If all wish to command who is to obey?
எல்லோரும் பல்லக்கில் உட்கார்ந்தால் பல்லக்குத் தூக்குவது யார்?
இரண்டொழுக்க பண்புகள் :
1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.
2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.
பொன்மொழி :
வாழ்க்கையின் நோக்கம்
பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
- புத்தர்
பொது அறிவு :
1.மலட்டுத்தன்மையை நீக்க பயன்படும் வைட்டமின் எது?
வைட்டமின் ஈ.
2. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் எது?
குரோமேடோபேர்.
English words & meanings :
minced - cut up into very small pieces, Adjective. மிக சிறிய துண்டுகளாக வெட்டுதல். பெயரளபடை
ஆரோக்ய வாழ்வு :
வெப்பம் அதிகம் ஏற்பட்டால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். மேலும் முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.
NMMS Q 14:
A என்பவர் B என்பவரின் சகோதரன். ஆனால் B என்பவர் A என்பவரின் சகோதரன் அல்ல எனில் A மற்றும் B ஆகியோரின் உறவுமுறை என்ன?
விடை: A - சகோதரன் ; B - சகோதரி
ஜூன் 30
மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் அவர்களின் பிறந்த நாள்
மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.
நீதிக்கதை
ஜூடோ பயிற்சி
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக்கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் நீங்கள் நினைத்ததுசரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும்.
எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான்.
குரு சொன்னார்: இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை.
குருவுக்கு ஆத்மார்த்தமாகநன்றி சொன்னான் சிறுவன்.
இன்றைய செய்திகள்
30.06.22
◆பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மேட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
◆ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
◆மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான இந்திய வனப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
◆நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.
◆பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - கவுன்ட்-டவுன் நேற்று தொடக்கம்.
◆ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன.
◆மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
◆தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி: ஜூலை 5-ந் தேதி சென்னையில் நடக்கிறது.
◆அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
Today's Headlines
◆The Government of Tamil Nadu has decided to amend the Motor Vehicle Act to make CCTV and sensors mandatory in school vehicles.
◆The Government of Tamil Nadu has allocated Rs. 4.75 crore for conducting intensive awareness campaigns in 19 districts to prevent anemia.
◆The final results of the 2021 Indian Forest Service Examination conducted by the Central Civil Service Commission were released yesterday. A total of 108 students across the country have passed the exam.
◆The Central Groundwater Authority has announced that stern action will be taken if all those who use underground water if not register by tomorrow (June 30).
◆PSLV-C53 rocket launches today - Countdown begins yesterday.
◆At the G7 summit in Germany, countries including the United States and India pledged to protect freedom of expression.
◆Malaysia Open Badminton: India's PV Sindhu advances to the next round.
◆National Youth Boxing Tournament will be held on 5th July in Chennai.
◆ India won the 2nd Twenty20 cricket match against Ireland by 4 runs.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.