புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புநடத்த பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 23, 2022

Comments:0

புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புநடத்த பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம், பாரதியாா் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநா் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நிலையில், யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ளது. இது குறித்த அறிக்கைகளை பல்கலைக்கழக மானியக் குழு தொடா்ந்து வெளியிட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தீவிரமாக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநா் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

இந்தநிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களிலும், புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதற்கு தேவையான பயிற்சியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடா்பான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தெந்த பாடப்பிரிவுகளில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படவுள்ளன, அதற்கான செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழகங்கள் விரிவாக பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews