ஐ.ஐ.டி., கணித வகுப்பு அறிமுகம் : பள்ளி மாணவர்கள் பயில வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 10, 2022

Comments:0

ஐ.ஐ.டி., கணித வகுப்பு அறிமுகம் : பள்ளி மாணவர்கள் பயில வாய்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்று தரும் 'வீடியோ' வகுப்புகளை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.

தேசிய உயர்கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யின் பிரவர்த்தக் அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு நவீன முறையில் கணிதம் கற்றுத்தரும் வீடியோ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுதும் ஆன்லைன் வழியில் வீடியோவாக நடத்தப்படும் இந்த வகுப்பில் மாணவர்கள் சேர கட்டணம் எதுவும் இல்லை. இந்த வகுப்பில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோவாக பாடங்கள் ஒளிபரப்பாகும். பாடங்கள் தொடர்பான 'ஆன்லைன்' வழியாக கணித செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.மொத்தம் நான்கு நிலைகளாக வகுப்புகள் நடக்கும். ஐந்தாம் வகுப்பில் இருந்து முதல் நிலை; ஏழாம் வகுப்பில் இருந்து இரண்டாம் நிலை; ஒன்பதாம் வகுப்பில் இருந்து மூன்றாம் நிலை; பிளஸ் 1ல் இருந்து நான்காம் நிலை வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது

.முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு ஜூனிலும், மூன்றாம், நான்காம் நிலைக்கு ஜனவரியிலும் வகுப்புகள் துவங்கும்.ஜூன் வகுப்புக்கு தற்போது விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.வகுப்புகளை முடித்து தேர்வு எழுதி, சான்றிதழ் பெற வேண்டுமென்றால் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews