மதம் மாற்ற முயற்சி
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் மாணவியரை மதமாற்றம் செய்ய முயற்சித்த ஆசிரியை மீது நடவடிக்கை கோரி, ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் தமிழாசிரியை ஒருவர், பள்ளி மாணவியரிடம் மதரீதியாக வேறுபாடு காட்டுவதாகவும், மாணவியரை மத மாற்றம் செய்யும் வகையில் செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, அப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை, வடக்கு போலீசில் புகார் செய்தார்.போலீசார், முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளித்தனர். ஆசிரியைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
நேற்று முன்தினம் மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் பள்ளியில் விசாரணை நடத்தினார்.புகார் அளித்த மாணவி, அவரது பெற்றோர், புகார் கூறப்பட்ட ஆசிரியை, அவர் பாடம் நடத்தும் வகுப்பு மாணவியர், பிற ஆசிரியர்களிடம் நேற்று காலை முதல் பிற்பகல் வரை விசாரணை நடந்தது. 'விசாரணை அறிக்கை, முதன்மை கல்வி அலுவலருக்கு அளிக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட இளைஞர் ஹிந்து முன்னணி சார்பில், நேற்று பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். 'பள்ளியில் மதமாற்ற முயற்சி மேற்கொண்ட, ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.