அஞ்சலக ஊழியர் பணி தேர்வு நியமனத்தில் மோசடி - போலி சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 06, 2022

Comments:0

அஞ்சலக ஊழியர் பணி தேர்வு நியமனத்தில் மோசடி - போலி சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு!

It has come to light that a large number of people selected for post office jobs have been issued fake school certificates. The Post Office has asked the School Education Department to investigate. Village Post Officers are appointed on behalf of the Postal Department. Only those who know Tamil and have studied Tamil are included. People have been selected for this on behalf of the Central Personnel Selection Board.

Hindi in Tamil Nadu Certificate

Of them, more than 1,500 have given certificates issued by the Tamil Nadu School Education Department. When the certificates of those selected for Tamil Nadu service were checked, the officers became suspicious of the 10th class certificates; The difference was revealed. In particular, in that certificate, Hindi is included as the first language subject. In the 10th class certificate, the concerned student has signed in Hindi.

Fake names

With the stamp of the Government of Tamil Nadu, the school education department has been given various names. Five names, including 'State Government Board of Tamil Nadu, State Board of Examinations, Board of Higher Secondary Examinations', are printed on the certificates. The official website of the Tamil Nadu School Education Department is www.tamilnadustateboard.org/. But, it's fake. Order for Inquiry

Fictional names, such as 'Chennai Secondary Public School, Chennai Senior School', are included in the certificate as far as the schools attended by the students are concerned. Shocking news has come out that hundreds of people have joined the postal service by giving fake 10th class certificates with so many scams.

A letter has been sent from the post office asking the school education department to investigate and verify the authenticity of these certificates. Chief General Manager of the Postal Department Selvakumar said:

In the appointment of Grama Niladharis in Tamil Nadu, only those who know Tamil are appointed. There is a mess in the certificates issued by the employees who were selected through the Central Personnel Selection Board. Therefore, we have written to the Tamil Nadu School Education Department to inform them of the truth. Once its conclusion is reached, we will take necessary action, ”he said.

அஞ்சலக ஊழியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஏராளமானோர், போலி பள்ளி சான்றிதழ்களை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, பள்ளிக் கல்வித் துறையிடம், தபால் துறை கேட்டுள்ளது. தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழக சான்றிதழில் ஹிந்தி

அவர்களில், 1,500க்கும் மேற்பட்டவர்கள், தமிழக பள்ளிக் கல்வி துறை அளித்த சான்றிதழ்களை கொடுத்துள்ளனர். தமிழக பணிக்கு தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, 10ம் வகுப்பு சான்றிதழ்களில், அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது; வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.குறிப்பாக, அந்த சான்றிதழில், முதல் மொழி பாடமாக, ஹிந்தி இடம் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு சான்றிதழில், சம்பந்தப்பட்ட மாணவர் ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளார்.

போலி பெயர்கள்

தமிழக அரசின் முத்திரையுடன், பள்ளிக் கல்வி துறைக்கு பல வகைகளில் பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டேட் கவர்ன்மென்ட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் எக்சாமினேஷன்ஸ், போர்டு ஆப் ஹையர் செகண்டரி எக்சாமினேஷன்ஸ்' உள்ளிட்ட ஐந்து பெயர்கள், அந்த சான்றிதழ்களில் அச்சிடப்பட்டு உள்ளன.தமிழக பள்ளிக் கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ற பெயரில், www.tamilnadustateboard.org/ என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அது போலியானது. விசாரணைக்கு உத்தரவு

மாணவர்கள் படித்த பள்ளிகளை பொறுத்தவரை, 'சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல்' என, கற்பனையான பெயர்கள், சான்றிதழில் இடம் பெற்றுள்ளன. இவ்வளவு குளறுபடிகளுடன் போலியாக தயாரிக்கப்பட்ட, 10ம் வகுப்பு சான்றிதழ்களை கொடுத்து, தபால் துறையில் நுாற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, பள்ளிக் கல்வி துறை தரப்பில் விசாரணை நடத்தி, உரிய அறிக்கை தருமாறு, தபால் துறையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தபால் துறை தலைமை பொது மேலாளர் செல்வகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமனத்தில், தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் வழியே தேர்வாகி வந்த ஊழியர்கள் அளித்துள்ள சான்றிதழ்களில் குளறுபடி உள்ளது. எனவே, உண்மைத் தன்மை குறித்து தெரிவிக்குமாறு, தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதன் முடிவு வந்த பின், தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews