சமஸ்கிருத படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 15, 2022

Comments:0

சமஸ்கிருத படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

சமஸ்கிருத படிப்புகள்

புதுடில்லியில் உள்ள ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தீன் கீழ், இப்பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிப்புகள்:

சிக்‌ஷா சாஸ்திரி - பி.எட்.,

சிக்‌ஷா ஆச்சார்யா - எம்.எட்.,

வித்யவரிதி - பிஎச்.டி., பாரம்பரிய பாடப்பிரிவுகள், எஜுகேஷன் மற்றும் யோகா தகுதிகள்:

பி.எட்., படிப்பிற்கு சாஸ்திரி - பி.ஏ., சமஸ்கிருதம் அல்லது ஆச்சார்யா - எம்.ஏ., சமஸ்கிருதம் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதிற்குள் குறையாமல் இருக்க வேண்டும்.

எம்.எட்., படிப்பிற்கு, இளநிலை பட்டப்படிப்பில் சிக்‌ஷா சாஸ்திரி- பி.ஏ., சம்ஸ்கிருதம் மற்றும் சிக்‌ஷா சாஸ்திரி -பி.எட்., படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குள் குறையாமல் இருக்க வேண்டும்.

பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த எம்.ஏ., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து படிப்புகளிலும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய பிரிவினர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும்.

தேர்வு முறை:

பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. ஜே.ஆர்.எப்., தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பிஎச்.டி., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 2

விபரங்களுக்கு: www.slbsrsv.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews