Breaking

Tuesday, March 29, 2022

சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பினார். சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி பேருந்துகளும் முறையாக பராமரிப்பதுடன், புதுப்பிக்கப்படாத பேருந்துகளை இயக்கக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | Cut-off seniority dates adopted for nomination in Employment Offices - January, 2022

முறையான பயிற்சி பெற்ற, உரிமம் வைத்துள்ள நபர்களை ஓட்டுநர்களாக நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வேன்கள், ஆட்டோ மற்றும் ரிக்க்ஷாக்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog