ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 28, 2022

Comments:0

ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் முள்ளம்பட்டியில் அரசு பள்ளியில், பள்ளிக் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யக் கூறி ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு.

சம்பவம் குறித்து பள்ளித் தலைமையிடம் ழ் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை.

கழிவறையை சுத்தம் செய்த பிஞ்சு குழந்தைகள்...! - ஆசிரியர்கள் அட்டூழியம்

ஈரோடு அருகே பள்ளிக் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய, |ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள முள்ளம்பட்டியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு முதலில் வரும் மாணவ மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய அங்குள்ள ஆசிரியைகள் நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது.

பள்ளிக்குழந்தைகள் கழிவறையை சுத்தம் செய்வதை, அங்கிருந்த ஒருவர் செல்போனில் படமெஎடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் அங்கு ஆய்வுக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து ஆசிரியர்களிடமும், பள்ளித் தலைமையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IMG_20220328_174941
IMG_20220328_175000

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84622388