சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டத் தயாரிப்பில் பங்கேற்க, மாண வர்கள் விண்ணப்பிக்கலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் குளறுபடியால் உரிய கால இடைவெளியில் புதுப்பிக்கப்படாமல், முழுமை திட்டம் காலாவதியானது.
இதையடுத்து, மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கான கலந்தாலோசனை நிறுவனம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்நிறுவன பிரதிநிதிகள், சி.எம்.டி.ஏ., அதிகாரி களுடன் கலந்து பேசி, தொலைநோக்கு ஆவண தயாரிப்புக்கான அடிப்படை பணிகளை துவக்கி உள்ளனர். இந்நிலையில், முழுமை திட்ட தயா ரிப்பில் பொறியியல், நகரமைப்பு, கட்டட வடி வமைப்பு துறை மாணவர்கள், பட்டதாரிகளை தொழில் பழகுனர்களாக சேர்க்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இவர்கள், குறிப்பிட்ட பணிகளில், இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை பங்கேற்க அனு மதி வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்களும், பட்டதாரிகளும், தங்கள் விபரங் களை, internships.cmda@gmail.com என்ற மின்னஞ் சல் முகவரிக்கு அனுப்பலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.