10, பிளஸ் 2 தேர்வு எப்போது? இன்று வெளியாகிறது
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று காலை வெளியிடுகிறார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட வகுப்புகளில் படித்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க | குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - 31ம் தேதி கடைசி
இந்த கல்வி ஆண்டிலும் கொரோனா பரவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொற்றின் தீவிரம் குறைந்து கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்ததின் பேரில், பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முன்வந்துள்ளது. முன்னதாக திருப்புதல் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கவும் திட்டமிட்டு அதற்கான அட்டவணைகளையும் கடந்த மாதம் வெளியிட்டு அதன்படி முதல் திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 28ம் தேதி இரண்டாம் திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தற்போது சுமார் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். அவர்களுக்கான தேர்வுகளை மே மாதம் நடத்துவோம் என்று ஏற்கனவே கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருப்புதல் தேர்வும் மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பொதுத் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பொதுத் தேர்வுக்கான அட்டவணைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தேர்வு அட்டவணைகளை வெளியிட உள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.