10 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்: அண்ணா பல்கலை முடிவு; அமைச்சர் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 20, 2022

Comments:0

10 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்: அண்ணா பல்கலை முடிவு; அமைச்சர் விளக்கம்

அண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல் மார்ச் 12 வரை அண்ணா பல்கலை தேர்வுகள் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. இந்நிலையில், ஆன்லைன் தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை அனுப்பி வைக்காததால் அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என அண்ணா பல்கலை விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க | விளையாட்டு விடுதிகளில் சேர - List of Sports Hostel for Boys - PDF

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது : ஆன்லைன் தேர்வில் தாமதமாக வந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். விடைத்தாள்களை தாமதமாக அனுப்பியதால் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது எனக்கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews