காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு தமிழ்மொழி கட்டாயம், 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பணிக்கு நடைபெறும் தேர்வில் தமிழ் கட்டாயம் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளிலும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டுள்ளது. எனவே, இனி நடைபெறும் காவலர் தேர்வில் தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அந்த தகுதி தேர்வு 1 மணி 20 நிமிடம் நடைபெறும். தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் அதாவது 32 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் அடுத்த கட்டமாக காவலர்களுக்கு என நடத்தப்படும் 80 மதிப்பெண்கள் தேர்வில் தகுதியானவர்களாக பார்க்கப்படும். எனவே தமிழ் தேர்ச்சி தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் காவலர்களாக முடியும் என்று மாற்றம் கொண்டுள்ளது.
மேலும் இனிவரும் காவலர்கள் தேர்வில் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே காவலர்கள் தேர்வில் சான்றிழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் தமிழ்தகுதி தேர்வும் முக்கியமாக பார்க்கப்படும்.
மேலும், தமிழில் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் புதிய தேர்வு முறையை கொண்டுள்ளது. வரும் காலங்களில் விரிவான நடைமுறைகளை அமல்படுத்தி தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதில் 50 பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி, 15 உளவியல், 15 விளையாட்டு துறையில் சான்றிதழ் பெற்றிருந்தால் அதற்கு வழங்கப்படும். அதன்பிறகு மருத்துவ சோதனை, உடற்தகுதி தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் அதனுடன் தமிழ் தகுதி தேர்வும் எழுத வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.