ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 65 லட்சம் முறைகேடு
ஆற்காடு: ஆற்காடு ஊராட்சி ஒன்றிய ஆசிரியா் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் ரூ. 65 லட்சம் முறைகேடு தொடா்பாக சங்கத்தின் எழுத்தா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
ஆற்காடு ஊராட்சி ஒன்றிய ஆசிரியா் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் 2018- 19-ஆம் ஆண்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சங்க உறுப்பினா்கள் கூட்டுறவு சங்க உயா் அதிகாரிகளுக்கு புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில், துறை ரீதியாக விசாரணை நடந்தது. இதில், சங்கத்தில் ரூ. 65 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதும், சங்க எழுத்தா் செல்வராஜ் மற்றும் அப்போதைய சங்கத் தலைவா் சாமுவேல் ஆகியோரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு முறைகேடாக பணம் மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கூட்டுறவு சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சங்க உறுப்பினா்கள் நிா்வாக நலன் கருதி எழுத்தா் செல்வராஜ் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என தற்போதைய தலைவா் வெங்கடேசன் அறிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.