தமிழகத்தில் நடைபெற வுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கு கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடிகளில் பணியாற்ற அனைத்து துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங் கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. இவர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி நடத் தப்படவுள்ளது. இதனிடையே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கு கூடுதல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது டன் வாக்குப்பதிவில் கால தாமதம் ஏற்படும் என சர்ச்சை எழுந்துள்ளது. எனவே, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்குள் பெரும் பாலும் ஆசிரியர்கள் தான் பணியமர்த்தப்படு கின்றனர். இதில், வாக்குச்சாவடி அலுவலர் 1 ஆக பணிபுரிபவர்களுக்கு வாக்காளர்களைஅடையாளம் கண்டறிவது. வாக்காளர் பட்டிய லில் குறிப்பிடுதல், ஆண், பெண் வாக்காளர் களை பிரித்தறிவது மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு உதவி புரியும் பணி கள் வழங்கப்படும். ஏற்கனவே நடந்த பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முதல் கடந்த ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தல் வரை இந்த அடிப்படை யில் தான் பணி வழங்கப்பட்டது. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. அதில், வாக் குச்சாவடி அலுவலர் -1க்கு கூடுதலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பதிவேட் டில் வாக்காளரின் விபரங்களை பதிவு செய்து, கையொப்பம் பெறுவது, வாக்களிப்பதற்கான ஆவணங்களை பதிவேட்டில் பதிவு செய்வது, வாக் காளர்களுக்கு துண்டுச் சீட்டு (சிலிப்) வழங்குவது என கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வாக்குச்சாவடி அலுவலர்-1 க்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் வாக்குப்பதிவிற்கும் கூடுதல் கால தாமதம் ஏற்படும். எனவே, வாக்குச்சாவடி அலுவலர் -1 க்கு ஏற்கனவே உள்ள பழைய பணிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த கூடுதல் பணிக்காக, கூடுதலாக வேறு ஒரு வரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.