15 முதல் 18 வயதுக்குட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி - மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 03, 2022

Comments:0

15 முதல் 18 வயதுக்குட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி - மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்

நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமான டோஸ் போடப்பட்டுள்ளது.

தற்போது, ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 15-18 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு தகுதி வாய்ந்த சிறுவர்கள் கோவின் ஆப் மூலமாக ஆதார் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி நாடு முழுவதும் 6.35 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 10 கோடி இருப்பதாக அரசு தரப்பில் புள்ளி விவரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய, மாநில சுகாதார அமைச்சர்கள், சுகாதாரத்திற்கான கூடுதல் தலைமை செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது, மற்ற வயதினர்களுக்கான தடுப்பூசிகளும் கலக்கப்படுவதை தவிர்க்க, 15-18 வயதினர்களுக்காக தனி தடுப்பூசி மையம், தனி அமர்வுகள் அமைக்க ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். ஒரே இடத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில், சிறுவர்களுக்கு என தனி வரிசையை அமைக்க வேண்டும். மேலும், சிறுவர்களுக்கு என தனி தடுப்பூசி குழுவும் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும்படியும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும்படியும் மண்டாவியா வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 33 லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி வளாகத்திலேயே 26 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆதார், மதிப்பெண் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்டவைகள் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் 5 முதல் 19 வரை தொடர் ஆலோசனை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வரும் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர் வெபினார்களை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களுடன் அனைத்து மாநில சிறப்பு கொரோனா மைய மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெபினார் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

1,525 பேருக்கு ஒமிக்ரான்

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 89 ஆயிரத்து 132.

* கடந்த 24 மணி நேரத்தில் 284 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 770.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,020 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460, டெல்லியில் 351, குஜராத்தில் 136, தமிழ்நாட்டில் 117, கேளராவில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 560 பேர் க

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews