தமிழகத்தில், எட்டாவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. இதில், வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆர்வம்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் ஏழு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
முதல் ஐந்து முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. இறைச்சி சாப்பிடுபவர்களுக்காக, அடுத்த இரண்டு முகாம்கள் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டன.இந்நிலையில், எட்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமையான நாளை, 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 2வது தவணை
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால், சனிக்கிழமை நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம், மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டு உள்ளது. நாளை 50 ஆயிரம் இடங்களில் நடக்கும் முகாம்களில், இரண்டாவது தவணைக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி போடப்பட உள்ளது. அதுதவிர, டாக்டர்கள் தலைமையில் குழுவினர் அமைக்கப்பட்டு, வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெறும். முகாமில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, மறுநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், திங்கட்கிழமை தடுப்பூசி மையங்கள் செயல் படாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.