ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தமிழகத்தில் கடந்த செப்.1-ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாவட்டங்களில் ஆசிரியா்கள், மாணவா்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏதுமின்றி புத்தாக்கப் பயிற்சிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் அலுவலா்களின் கருத்துகளை கேட்டுள்ளாா். இதில், அலுவலா்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை தமிழக அரசு அறிவிக்கும். மேலும் இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்கும் நேரடி ஆலோசனைக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆணையா் நந்தகுமாா் ஆய்வு நடத்தவுள்ளாா். மேலும் தொடக்கக் கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் ஆகியவற்றில் தற்போது நிலுவையில் உள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.