பிராந்திய மொழிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை – 8 மாநிலங்களுக்கு AICTE அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 03, 2021

Comments:0

பிராந்திய மொழிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை – 8 மாநிலங்களுக்கு AICTE அனுமதி

புதிய கல்விக் கொள்கையின் படி, நடப்பு கல்வியாண்டில் பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநில கல்லூரிகளுக்கு இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அனுமதி வழங்கி உள்ளது.

மாணவர் சேர்க்கை:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அதில் தமிழ் உள்ளிட்ட 11 பிராந்திய மொழிகளில் பாடங்களை அறிமுகம் செய்யவும் சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்நிலையில் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் 8 மாநிலங்களில் உள்ள 13 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஆங்கில மொழியில் மட்டுமே பொறியியல் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஏஐசிடிஇ, பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வியை பயிற்றுவிக்க கடந்த மே மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதன்படி இந்த ஆண்டு முதல் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஒரியா, இந்தி ஆகிய 11 மொழிகளில் பி.டெக்., பயிற்றுவிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்காக நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஆந்திரம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய 8 மாநிலங்களில் 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹிந்தி மொழிக்காக உத்தரபிரதேசம் மாநிலத்தில் நான்கு கல்லூரிகளுக்கும், ராஜஸ்தானில் இரண்டு கல்லூரிகளுக்கும், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒரு கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மராத்தி மொழிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு கல்லூரிகளுக்கும், தெலுங்கு, வங்க மொழிகளுக்கு தலா ஒரு கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மின் மற்றும் மின்னணு பொறியியல் என 3 பிரிவுகளிலும், கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கும் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews