SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொலைபேசி, SMS மூலம் புதிய சேவைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொலைபேசி, SMS மூலம் புதிய சேவைகள்!

பேரிடர் காலங்களுக்கு உதவியாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மற்றும் SMS மூலம் வங்கி கணக்கு இருப்பு, ATM செயல்பாடுகள் உள்ளிட்ட சில முக்கியமான சேவைகளை வழங்க உள்ளது.

மொபைல் சேவை

கொரோனா பேரிடர் காலத்தில் தனது வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதில் எவ்விதமான தடைகளும் ஏற்படாதவாறு சில முக்கிய நடவடிக்கைகளை SBI வங்கி மேற்கொண்டு வருகிறது. அதாவது வங்கியுடன் தொடர்பு இல்லாத சில சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ஊக்குவிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது தவிர SBI வாடிக்கையாளர்களை கொரோனா தொற்றில் இருந்தும், வங்கி மோசடியில் இருந்தும் பாதுகாக்கவும் பலவிதமான வழிகாட்டுதல்களை அளித்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கி, வாடிக்கையாளர்கள் சில அவசர வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ள கட்டணமில்லா வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் SBI வாடிக்கையாளர்கள் 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற கட்டணமில்லா எண் மூலம் அழைத்து இவ்வகை சேவைகளை பெறலாம். இது தவிர வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து வங்கிக்கு ஒரு SMS அனுப்புவதன் மூலமும் இத்தகைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்து SBI வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘கொரோனா தொற்று காலத்தில் SBI வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாங்கள் உங்களுக்கு சில சேவைகளை வழங்குகிறோம். அதன் படி உங்கள் அவசர வங்கி தேவைகளுக்கு உதவும் ஒரு தொடர்பு இல்லாத சேவையை SBI வழங்குகிறது. அதன் படி SBI வாடிக்கையாளர்கள் 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளது. SBI யின் இவ்வகையான வங்கி சேவையில், IVR ன் கடைசி 5 இலக்க எண்ணை பயன்படுத்தி பரிவர்த்தனைகளுக்கான கணக்கு இருப்பு போன்ற சேவைகளை செயல்படுத்த முடியும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்கள் வங்கி கணக்கின் தற்போதைய இருப்பு மற்றும் கடைசியாக மேற்கொண்ட ஐந்து பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வகை அழைப்பில் கிடைக்கும் பதில்கள், தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் SMS வழியாக அனுப்பப்படும். இது தவிர ATM கார்டு பிளாக் செய்வது, புதிய ATM அல்லது கிரீன் கார்டு பின் சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews