அனைத்து அரசு/அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை/ உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருகை - பள்ளிகளில் ஆய்வு குறித்த அறிவுறுத்தல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

1 Comments

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை/ உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருகை - பள்ளிகளில் ஆய்வு குறித்த அறிவுறுத்தல்கள்

*பள்ளிகளில் ஆய்வு*
*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருகை -பள்ளிகளில் ஆய்வு* - *மாநில அளவிலான உயர்நிலை அலுவலர்கள் குழு பள்ளிகளில் பார்வை.*

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை/ உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு:

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாநில அளவிலான உயர் நிலை அலுவலர்கள் குழு பள்ளிகளை பார்வையிட உள்ளதால்,
சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 01) பள்ளி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

02) பள்ளி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

03) ஆசிரியர் அறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

04)நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வுக் கூடம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 05)கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்கள், தேர்ச்சி சதவீதம், இனவாரியாக மாணவனுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகைகள், தாங்கள் தலைமையாசிரியர் பொறுப்பு ஏற்ற பிறகு செய்யப்பெற்ற மாற்றங்கள் கட்டமைப்பு வசதிகள் குறித்து புள்ளிவிவரங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

06) ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள பள்ளி கட்டமைப்பு சார்ந்த படிவங்களில் குறிப்பிட்டவாறு பள்ளிக்கு என்ன தேவை என்ற விவரங்களை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

07) விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களும் வழங்கப்பட்டு, வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் பெற்று இருக்க வேண்டும்.

08) அனைத்து மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

09) அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும். ஆளறி அட்டை(ID) அணிந்திருக்க வேண்டும். 10) பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான குழு,விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் குழு அமைத்து இருக்க வேண்டும்.சுற்றறிக்கையில் ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று இருக்க வேண்டும்.

11)உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் தூய்மையாக வைக்கப்பட்டு இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

12) கல்வி தொலைக்காட்சி அட்டவணை பிளக்ஸ் பேனர் பள்ளியின் நுழைவு வாயிலில் வைத்திருக்கவேண்டும்.

13) மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் எந்தப் பாடப் பிரிவிற்கு சேர்க்கை வழங்கப்படுகிறது என்ற விவரத்தை அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்.

14) அனைத்து பாட ஆசிரியர்களும் வகுப்பு வாரியாக பாட வாரியாக கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரம் பாட கருத்து சார்ந்து பாடப்புத்தகத்தையொட்டி கூர்ந்து கவனித்து பாடக்குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டும்.

15) மாணவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு பாடநூல்கள் பெற்று செல்லவும், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்கவும் முழுமையான ஈடுபாட்டோடு செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.

16) 2021-2022 கல்வி யாண்டிற்கான மாணவர்கள் வருகை பதிவேடு கண்டிப்பாக எழுதி முடித்திருக்க வேண்டும். 17 ) சேர்க்கை-நீக்கல் பதிவேடு, மாற்றுச் சான்றிதழ் பதிவேடு, வருகை பதிவேடுகள் முழுமையாக முடித்திருக்க வேண்டும்.

18) மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்கள், CIVIL WORKS- ALL KIND OF BUILDING DETAILS EMIS இணைய தளத்தில் நிகழ் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

19) குடிநீர் குழாய்கள் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும்.

20) சிறுநீர் கழிப்பிடம்/ கழிப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக, தண்ணீர் வசதியுடன் இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டும்.

21) அனைத்து ஆசிரியர்களும்,பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

22) அனைத்து தகவல்களும்,, தகவல் பலகையில், புதுப்பித்து நிகழ்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

22) *10,12 வகுப்பு மாணவர்களுக்கு, தனித்தனியாக* *இன்றே*

*தவறாமல் வாட்ஸ்* *குரூப் தலைமை* *ஆசிரியர், ஆசிரியர் உட்பட ஆரம்பித்திட* *வேண்டும்.*

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews