7வது ஊதியக்குழு: பரவி வரும் வதந்திகள் – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 06, 2021

Comments:0

7வது ஊதியக்குழு: பரவி வரும் வதந்திகள் – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வானது ஜூலை மாதம் வழங்கப்படுவதாக பல்வேறு அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் விளக்கம்:

மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த 2020 ஜனவரி முதல் DA மற்றும் DR உயர்வானது கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான பல வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. முன்னதாக மே மாதம் நடக்க இருந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும், ஜூன் 26ம் தேதி அன்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், ஊழியர்களுக்கான DA உயர்வு குறித்து எந்தவிதமான அறிவிப்புகளும் வெளிவரவில்லை. இதனால் ஜூலை முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது புதிதாக DA உயர்வு செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று மீண்டும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூலை முதல் DA நிலுவை வழங்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல் போலியானது என்றும் மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் DA நிலுவையானது செப்டம்பரில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அதிகாரிகள் மட்டத்தில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.

7வது ஊதிய குழுவின் அடிப்படை சம்பள பட்டியலின் படி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. இறுதியில் ஊழியர்களின் DA, TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற அனைத்து சலுகைகளும் அறிவிக்கப்பட்டு சேர்க்கப்படும் பொது தான் ஊழியரின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews