கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் ஜிஸ்டி வரி செலுத்துவோருக்கு என்று பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
GST வரி:
கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனை அடுத்து, நோய் பரவலை குறைக்க அரசு பொது முடக்கத்தினை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மக்களின் இந்த நிலையினை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல வித சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது GST வரி செலுத்துவதில் சில சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள், 5 கோடிக்கும் கீழே வருமானம் ஈட்டுவதாக பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள் மற்றும் கலவை திட்டத்தின் கீழ் வரி செலுத்த விருப்பம் தெரிவித்திருந்த நபர்கள் என்று அனைவருக்கும் தனித்தனியாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தாமதமாக வரி செலுத்துவோருக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான ஜிஸ்டிஆர் – 4 படிவத்தினை தாக்கல் செய்வது, ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான ஐஎஸ்டி – 04 படிவத்தினை வழங்குவது ஆகியவற்றிக்கான கால அவகாசம் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, May 04, 2021
Comments:0
GST வரி செலுத்துவோருக்கு புதிய சலுகைகள் – முழு விபரம் வெளியீடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.