பள்ளிக் கல்வி - சுற்றுச்சூழல் மேம்பாடு - ஒரு உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து - 1 Assistant Director and 32 Eco Coordinators Pay Order for the month of April - 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 04, 2021

Comments:0

பள்ளிக் கல்வி - சுற்றுச்சூழல் மேம்பாடு - ஒரு உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து - 1 Assistant Director and 32 Eco Coordinators Pay Order for the month of April - 2021

1. அரசாணை (1டி) எண்.175, பள்ளிக்கல்வி[பக5(1)]துறை, நாள் 20.07.2009.

2. அரசாணை (1டி) எண்.99, பள்ளிக்கல்வி [பக5(1)] துறை, நாள் 05.03.2018.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 001510/எல்/ இ3/2021, நாள் 23.04.2021. பார்வை 1ல் காணும் அரசாணையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான, சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கும்,
பசுமைப்படை திட்டத்தினை செம்மையாக செயல்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முதுகலை ஆசிரியர் (தாவரவியல்/உயிரியல்) வீதம் புதியதாக 32 பணியிடங்கள் ரூ.9300 - 34800 ரூ4600/- நிலை ஊதியம் (Grade Pay) என்ற ஊதிய விகிதத்திலும் + மாவட்டங்களிலுள்ள செயல்பாடுகளைக் கவனிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் உதவி இயக்குநர் என்ற நிலையில் ஒரு பணியிடம் (ரூ.15600-39100 +ரூ.5400/ நிலை ஊதியம் (Grade Pay) என்ற ஊதிய விகிதத்திலும் தோற்றுவித்து ஆணைகள் வெளியிடப்பட்டன. பார்வை 2-ல் காணும் அரசாணையில் இப்பணியிடங்களுக்கு கடைசியாக, 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2) மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும் இப்பணியிடங்களுக்கு, ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

3) பார்வை 1ல் குறிப்பிட்டுள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில், ஏப்ரல் 2021-ம் மாதத்திற்கான ஊதியப் பட்டிகளை அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews