'சிமேட்' (CMAT) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 11, 2021

Comments:0

'சிமேட்' (CMAT) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Release-of-%2527CMAT%2527-Entrance-Exam-Results
‘சிமேட்’ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
IMG_20210411_183308
மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில் இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர ‘சிமேட்’ எனப்படும் பொது நிர்வாக நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். தேசிய தேர்வு முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வுஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான ‘சிமேட்’ தேர்வு கடந்த மார்ச் 31-ம் தேதி நாடு முழுவதும்278 மையங்களில் கணினிவழியில் நடைபெற்றது. இந்தத் தேர்வெழுத மொத்தம் 71,490 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 52,327 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை nta.ac.in ஆகிய இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84634266