தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.
ந.க.எண்.1907/இ1/2020, நாள். 05.09.2020.
பொருள் : தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி / துவக்க/ நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை
வழங்குதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க
உரிய அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து.
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / அரசு / நகராட்சி / துவக்க /
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை | சிறப்பு நிலை
வழங்கக்கோரும் கோரிக்கை மனுக்கள் பெறப்படின் முகாம் நடத்தி அக்கோரிக்கை மனுக்களை
பரிசீலித்து விதிகளின்படி சரியாக உள்ளதா என்பதனை உறுதிசெய்து உரிய ஆணையினை
காலதாமதம் ஏற்படாமல் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்கள்
ஆளுகைக்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கிய விவரங்களை
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்பாக
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஒவ்வொரு மாதமும் தொடக்கக் கல்வி
இயக்குநருக்கு அறிக்கையாக அனுப்பவும் என அறிவுறுத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U