நிகழாண்டில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2020 முழுமையாக இணையவழி மூலமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப பதிவு முதல் கல்லூரி சேர்க்கை வரை இணைய வழி மூலமே நடைபெறும். விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல், தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகிய அனைத்தும் இணைய வழியாகவே நடைபெறும்.சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் இணைய வழியாக, விண்ணப்பதாரர் இல்லாமல் நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் எல்லா செயல்களையும் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்யலாம்.இணையதள வசதி இல்லாதவர்கள், எல்லாச் சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும்.முழுமையான இணையவழி கலந்தாய்வு கீழ்க்காணும் பல அடுத்தடுத்த கட்டங்களை கொண்டது.விண்ணப்பம் பதிவு செய்தல், சமவாய்ப்பு எண் உருவாக்குதல், அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல், பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் இணைய வழியாக சான்றிதழ் சரிபார்த்தல், தரவரிசை வெளியிடுதல், சேர்க்கைக்கான முன்பணம் செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை பதிவுசெய்தல்,குறிப்பிட்ட நாளில் தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல், இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல், இறுதி ஒதுக்கீடு செய்தல், ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேருதல் உள்ளிட்ட அனைத்தும் இணையவழியிலேயே மேற்கொள்ளப்படும்.விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்: விவர படிவம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணையதளத்தில் கிடைக்கும். அதைப் பதிவிறக்கம் செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்தபின் கணினியில் விவரங்களை வரிசையாக உள்ளீடு செய்தால், விரைவாகவும் சரியாகவும் செய்து முடிக்கலாம்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இந்த பதிவைப் பூர்த்தி செய்த பின்னரே கணினியில் பதிவு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.விண்ணப்ப பதிவைத் தொடங்கும் முன் மாணவர்கள் அலைபேசி எண் (தங்களது அல்லது தங்களது பெற்றோரின் எண்) , மின்னஞ்சல் முகவரி (ஏற்கெனவே இல்லையெனில் புதிதாக உருவாக்கி வைத்து கொள்ளவும்), கடன் அட்டை /பற்று அட்டை/ இணையத்தின் வழி செலுத்தும் விவரங்கள். அல்லது The secretary, TNEA , Chennai - 25 இல் மாற்றத்தக்க வரைவு காசோலை ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு பதிவினைத் தொடங்கலாம். www.tneaonline.org என்கிற தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணையதளத்தில் நுழைந்து, Click here for New user registration என்ற ஐகானை கிளிக் செய்யவும்.அப்போது Registration என்ற பெயரில் வரும் பக்கத்தில் பெயரை பதிவிட வேண்டும் (பத்தாம் வகுப்பு /பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் உள்ளது போல பதிவு செய்யவும்) பின்னர் அதில் கேட்கப்படும் விவரங்களைக் கொடுக்கவும். நீங்கள் கொடுத்த கைபேசி எண்ணிற்குத்தான் அனைத்து குறுந்தகவல்களும் அனுப்பப்படும் என்பதால் கவனமாகப் பதிவிட வேண்டியது அவசியம்.
நீங்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிதான் user ID ஆக கருதப்படும். இந்த மின்னஞ்சல் வழியாகத்தான் சேர்க்கை தொடர்பான அனைத்து விவரங்களும் அனுப்பப்படும் என்பதால் கவனமுடன் கையாள வேண்டும்.மேலும், இதற்காக ஆறு எழுத்துகளைக் கொண்ட கடவுச் சொல்லை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் குறைந்தது ஓர் எழுத்து எண்ணாகவும், ஓர் எழுத்து ஸ்பெஷல் கேரக்டராகவும் ஆகவும் மற்றவை சாதாரண எழுத்தாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இங்கு கொடுக்கப்பட்ட விவரங்களைப் பின்னர் மாற்ற இயலாது என்பதால் சில முறை சரி பார்த்து உறுதி செய்வது நல்லது. உங்கள் பயனாளர் பெயர்/ மின்னஞ்சல் மற்றும் login ID / கடவுச் சொல் ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இவற்றை பல தடவை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் அவற்றை எழுதி வைத்துக் கொள்வது நல்லது.விவரங்களை உள்ளிட்ட பின்னர் ஷேவ் பட்டனைக் கிளிக் செய்யவும். அப்பொழுது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) வரும். அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டு ள்ன்க்ஷம்ண்ற் பட்டனை கிளிக் செய்தால், உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட தகவல் வரும்.இனிமேல், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணைய தளத்திற்கு சென்று பயனாளர் பெயர்/மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உங்களுக்குரிய தகவல் பக்கத்திற்கு(இணைய பக்கத்திற்கு) செல்லலாம்.
அந்த பக்கத்தில், தனிப்பட்ட தகவல்கள், சிறப்பு இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் தகவல்கள், கல்வி கற்ற நிறுவனங்களின் தகவல்கள், கல்வி பற்றிய தகவல்கள், மாற்றப்பட்ட தகவல்கள் மற்றும் முன் பார்வை (ப்ரீவியூ அண்ட் சேஞ்ச் இன்ஃபர்மேஷன்), பே மெண்ட், ஜெனரேட் ரிப்போர்ட் போன்றவற்றை உள்ளிடுவதற்கான படிவங்கள் இருக்கும். பெர்சனல் இன்ஃபர்மேஷன் படிவத்தை நிரப்பி சேவ் அண்ட் கன்டினியூவைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் சிறந்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர். சிறப்பு ஒதுக்கீட்டிற்கான படிவத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். அதற்கான சான்றிதழ்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேணடும். சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் கலந்து கொள்பவர்கள், பொதுக் கலந்தாய்விலும் கலந்து கொள்ளத் தகுதியுடைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அருகே உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தைத் தேர்வு செய்து கொள்வது அவசியம். படிவத்தை நிரப்பிய பின்னர் சேவ் அண்ட் கன்டினியூவைக் கிளிக் செய்யவும்.
அடுத்து கல்வி கற்ற நிறுவனங்களின் தகவல்களை (8,9,10,11,12 வகுப்பு விவரங்கள்) பதிவிட வேண்டும். பின்னர் சேவ் அண்ட் கன்டினியூவைக் கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து கல்வி பற்றிய தகவல்களை உளளிட வேண்டும். 2020 - ஆம் ஆண்டில் மாநில கல்விப் பிரிவில் பிளஸ்-2 முடித்த மணவர்கள் மதிப்பெண் விவரங்களை உள்ளிட வேண்டியதில்லை.மற்ற வருடங்களில் முடித்தவர்கள் படிவத்தை நிரப்ப வேண்டும். அந்த படிவத்தை நிரப்பிய பின்னர் சேவ் அண்ட் கன்டினியூவைக் கிளிக் செய்ய வேண்டும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் பேக் பட்டன் மூலம் பின் சென்று திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.பின்னர் பதிவு கட்டணப் பகுதிக்குச் சென்று அங்கு தெரிவிக்கப்ட்டுள்ள கட்டணத்தை கிரடிட் கார்டு/ டெபிட் கார்டு/ நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். அல்லது டிமாண்ட் டிராஃப்ட் (டிஎஃப்சி) வழியாகவும் செலுத்தலாம்.அந்த திரையில் தோன்றும் எஹற்ங்ஜ்ஹஹ் -ஐப் பயன்படுத்தி எந்த வங்கி வழியாக செலுத்த விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து பணத்தை செலுத்த வேண்டும் (கிரிடிட் கார்டின் வழக்கமான முறை). பணம் செலுத்தப்பட்ட பின்னர் பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது என்ற தகவல் வரும்.பின்னர் ஜெனரல் ரிப்போர்ட் பட்டனைக் கிளிக் செய்து, தொடர்ந்து டவுன்லோடு என்பதைத் கிளிக் செய்து நமது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய நாள்கள்: இணையம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் :16-08-2020.
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கான தொடக்க நாள் : 31-07-2020
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் : 20-08-2020
சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உருவாக்கப்படும் நாள் : 21-08-2020
சேவை மையங்கள் மூலம் அசல் சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் நாள்கள் : 24-08-020 முதல் 01-09-2020 வரை.
தரவரிசை வெளியீடு நாள் : 07-09-2020
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு : 10-09-2020 முதல் 06-10-020 வரை.
பொது கலந்தாய்வு தொடங்கும் நாள் (ஆன்லைன் மூலம்) : 17-09-22020 முதல் 06-10-020 வரை
தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு (ஆன்லைன் மூலம்) : 10-09-020 முதல் 14-09-2020 வரை.
துணை கலந்தாய்வு : 08-10-2020 முதல் 12-10-2020 வரை.
SCA to SC counseling (Online): 14-10-2020 முதல் 15-10-2020 வரை
கலந்தாய்வு இறுதி நாள் : 15-10-2020
மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தைப் பாருங்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கான தொடக்க நாள் : 31-07-2020
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் : 20-08-2020
சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உருவாக்கப்படும் நாள் : 21-08-2020
சேவை மையங்கள் மூலம் அசல் சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் நாள்கள் : 24-08-020 முதல் 01-09-2020 வரை.
தரவரிசை வெளியீடு நாள் : 07-09-2020
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு : 10-09-2020 முதல் 06-10-020 வரை.
பொது கலந்தாய்வு தொடங்கும் நாள் (ஆன்லைன் மூலம்) : 17-09-22020 முதல் 06-10-020 வரை
தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு (ஆன்லைன் மூலம்) : 10-09-020 முதல் 14-09-2020 வரை.
துணை கலந்தாய்வு : 08-10-2020 முதல் 12-10-2020 வரை.
SCA to SC counseling (Online): 14-10-2020 முதல் 15-10-2020 வரை
கலந்தாய்வு இறுதி நாள் : 15-10-2020
மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தைப் பாருங்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.