முந்தைய நிறுவனத்தின் PF கணக்கை புதிய நிறுவனத்தின் PF கணக்குக்கு மாற்றுது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 02, 2020

Comments:0

முந்தைய நிறுவனத்தின் PF கணக்கை புதிய நிறுவனத்தின் PF கணக்குக்கு மாற்றுது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முந்தைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்தின் பிஎஃப் கணக்குக்கு மாற்றுது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்...
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு தரப்பில் பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஃஎப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதத்திலிருந்து 55 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஃஎப் சந்தாதாரர்கள் தங்களது பிஃஎப் பணத்தை எடுத்துள்ளதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற சூழலில் பிஃஎப் கணக்கை ஆன்லைன் மூலமாகவே டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்
1. பிஎஃப் சார்ந்த அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/ என்ற இணைப்பில் சென்று, பிஎஃப் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
2. பிஃஎப் கணக்கில் உள்நுழைந்த பிறகு ‘Online services’ என்ற மெனுவுக்குள் சென்று ’One Member – One EPF Account’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் தனிநபர் விவரங்கள் மற்றும் நடப்பு வேலைக்கான பிஃஎப் கணக்கை சரிபார்க்க வேண்டும். 3. முந்தைய நிறுவனத்தின் கணக்கு விவரங்களைப் பதிவிட்டு ‘Get details’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், முந்தைய நிறுவன ஊழியர் அல்லது நடப்பு நிறுவன ஊழியர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
4. அதன் பின்னர் ‘Get OTP’ என்பதை கிளிக் செய்தால் பிஎஃப் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களது மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லைப் பதிவிட்டு ‘Submit’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிஃஎப் கணக்கை இணைப்பதற்கான கோரிக்கைக்கு நிறுவனம் ஒப்புதல் வழங்கிய பிறகு, முந்தைய நிறுவனத்தின் பிஃஎப் கணக்கிலிருந்த பணம் தற்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பிஅஎப் கணக்குடன் இணைக்கப்பட்டு விடும். இதற்கு 30 நாட்கள் வரை ஆகும். பிஎஃப் கணக்கு மாறிய பிறகு குறுஞ்செய்தி மூலமாக உங்களது மொபைல் எண்ணுக்கு தகவல் வரும். கோரிக்கை நிலை என்ன என்பதைச் சரிபார்க்க வேண்டுமென்றால் ’Online services’ என்ற மெனுவில் சென்று ’Claim Status’ என்பதை கிளிக் செய்தால் உங்களது பிஃஎப் கணக்கு இணைப்புக் கோரிக்கையின் நிலையை நீங்கள் பார்க்கலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews