B.Sc IT என்ற படிப்பு என்றால் என்ன? அதில் சேரலாமா? IT துறையில் பணியாற்ற முடியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 17, 2020

Comments:0

B.Sc IT என்ற படிப்பு என்றால் என்ன? அதில் சேரலாமா? IT துறையில் பணியாற்ற முடியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிஎஸ்சி ஐடி (B.Sc IT ) என்றால் என்ன, அதுவும் பி.டெக் போன்று இருக்குமா? ஐடி துறையில் பணியாற்ற முடியுமா? வாருங்கள் பார்க்கலாம்
‘நான் பன்னிரண்டாம் வகுப்பு கணிதம், கம்ப்யூட்டர் பிரிவு எடுத்து முடித்துள்ளேன். அடுத்ததாக கலை அறிவியல் துறையில் சேரலாம் என்று இருக்கிறேன். ஒரு சிலர் பிஎஸ்இ ஐடி என்று துறை இருப்பதாக கூறுகிறார்கள். என்னுடைய இருப்பிடத்துக்கு அருகே உள்ள கல்லூரியில் அந்த படிப்பு உள்ளது. ஆனால், அது தன்னாட்சி படிப்பாக உள்ளது. பிஎஸ்சி ஐடி என்றால் என்ன, அதுவும் பி.டெக் போன்று இருக்குமா? ஐடி துறையில் பணியாற்ற முடியுமா?’ - சந்தோஷ், திருநெல்வேலி
B.Sc IT
B.Sc IT என்பது தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மற்ற பட்டப்படிப்புகளை போன்றே இதற்கும் மூன்று ஆண்டுகள், ஆறு செமஸ்டர்கள் தேர்வுகள் உண்டு. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் இந்த படிப்பு இருக்காது. சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே பிஎஸ்சி ஐடி படிப்பு இருக்கும். நீங்கள் உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி ஐடி துறை இருப்பதாக சொலகிறீர்கள். ஐடி என்பது அடிப்படையாக ஸ்டோரிங், பிராசசிங், செக்யூரிங், மேனேஜிங் இன்பார்மேசன் உள்ளிட்டவைகளைப் பற்றி படிக்க வேண்டிருக்கும்.
சாப்ட்வேர் துறை:
சாப்ட்வேர் துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் பி.எஸ்சி ஐடி தாராளமாக படிக்கலாம். சாப்ட்வேர் டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெஸ்டிங், சாப்ட்வேர் இன்ஜினியரிங், வெப் டிசைன், டேட்டா பேஸ், புரோகிராமிங், கம்ப்யூட்டர் நெட்வொர்கிங், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற துறைகளில் பிஎஸ்சி ஐடி முடித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. டெக்னகாலாஜி சம்பந்தபட்ட துறையில் கொடிக்கட்டி பறக்க வேண்டும் என்றால், பி.டெக் படிப்பிற்கு அடுத்தாக பி.எஸ்இ ஐடி உள்ளது.
என்ன தகுதி வேண்டும்?
B.Sc IT படிப்பதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் கம்ப்யூட்டர் சைன்ஸ், கணிதம் எடுத்து படித்திருக்க வேண்டும். கணினியை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் மட்டுமே பிஎஸ்சி ஐடி படிப்பில் சேர முடியும். பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கணினியில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பத்தை உடனடியாக புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் பிஎஸ்சி ஐடி படிப்பில் சரியாக படித்து வெளியேற முடியும்.
பிஎஸ்சி ஐடி படித்தால் எங்கு வேலை கிடைக்கும்?
இப்போதே பல துறைகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் வரும் காலங்களில் பெரும்பாலான வேலைகளில் கம்ப்யூட்டர் துறையும் இணைந்தே காணப்படும். அந்த வகையில், விண்வெளி ஆராய்ச்சித் துறை, ஹெல்த் கேர், பார்மஸி, பயோ டெக்னாலாஜி, கெமிக்கல், சுற்றுச்சூழல் மேலாண்மை, கல்வித்துறை போன்ற பல துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கும். இந்த துறைகளில் புரோகிராமர், சாப்ட்வேர் டெவலப்பர், குவாலிட்டி அனாலிஸ்ட், ஐடி ஸ்பெசலிஷ்ட், டெக்னிக்கல் கன்சல்ட்டன்ட், கிராபிக் டிசைனர் போன்ற பதவிகளில் பணி நியமனம் பெற முடியும்.
Skills- இதர திறமைகள்:
பிஎஸ்சி ஐடி படிக்கும் போது, வெறும் படிப்பில் மட்டும் கெட்டிக்காரராக இருக்கக்கூடாது. மூன்று வருடங்களுக்குப் பிறகு என்ன திறமைகள் நிறுவனங்கள் எதிர்பார்க்கிறதோ, அத்தகைய திறமைகளை வளர்த்தக் கொள்ள வேண்டும். நீங்கள் ஐடி துறை என்பதால், அனாலிட்டிக்கல், பிராபளம் சால்விங், கிரியேட்டிவிட்டி, கிரிட்டிக்கல் உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை தான் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும்.
Syllabus
பிஎஸ்சி ஐடி துறையில் இருக்கும் சில பொதுவான பாடத்திட்டங்கள்:C Programming, Digital Principles & Applications, Object Oriented Programming with Java, Data Structures, Web Designing Languages, Mobile Computing, Software Engineering, Mobile Application and Development, ASP .Net, PHP, Internet Security, Project Development , Network Technology & Administration, Networking and Internet Environment
​B.SC IT Vs B.Tech IT - B.SC IT க்கும் B.Tech படிப்பிற்கும் என்ன வித்தியாசம்:
பலரும் B.Sc IT மற்றும் B.Tech இந்த இரண்டு படிப்புகளும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். பி.டெக் என்பது இன்ஜினியரிங், பி.எஸ்சி என்பது டிப்ளமோ படிப்பு போன்றது. இரண்டும் ஒரே துறை சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், படிக்கின்ற பாடங்கள் பி.டெக் படிப்பிற்கு கூடுதலாக இருக்கும். பி.எஸ்சி ஐடியில் 6 செமஸ்டர்கள் இருக்கும், அதே நேரத்தில் பி.டெக் படிப்பிற்கு மொத்தம் 8 செமஸ்டர்கள் இருக்கும். அதற்கு ஏற்றாற் போல் பாடங்களும் கூடுதலாகவே இருக்கும். எனவே, பி.எஸ்சி ஐடி என்பது ஒரு அடிப்படை படிப்பாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews