Search This Blog
Saturday, February 08, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
என்னதான் ஆய்வு செய்கிறீர்கள் ஒரு பதிலும் தெரியவில்லை 4 மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி கேட்டு டோஸ் வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் கடும் அதிருப்தி.
*வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடித்தார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
*அனைவரையும் வேலூர் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார் இணை இயக்குனர் பாஸ்கர் சேது (தொடக்கக்கல்வி) முன்னிலை வகித்தார் கூட்டத்துக்கு தலைமை தாங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் முத்து பழனிச்சாமி பேசியதாவது பள்ளி மாணவர்களுக்காக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஒவ்வொரு பள்ளிக்கும் முழுமையாக சென்றடைகிறதா? சென்றடையாத பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை? அதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
*வட்டார கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்ய செல்லும்போது அங்கு பணியிலிருக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு பாடங்களை கற்றுத் தருகின்றனர் அந்தப் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
*குறிப்பிட்ட ஒரு பாடத்தை மட்டும் கேட்காமல் அனைத்து பிரிவு பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கவேண்டும் இதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் புரிந்ததா இல்லையா என்பதை அறிய முடியும் ஆய்வுக்கு செல்லும் இடத்தில் எது போன்ற கேள்விகளை கேட்கலாம் என்பதை நீங்கள் (வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்) முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ஒன்றுமே தெரியாமல் கேள்விகளை கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் புரியாமல் தலையாட்டிவிட்டு தான் வர நேரிடும் குறிப்பாக ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் சோதிக்கவேண்டும்.
*ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் அளித்துள்ளோம்.
*வாரந்தோறும் ஒரு பாட வேளையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் இவற்றை கற்பிக்க வேண்டும் அங்கன்வாடிகளில் எல்கேஜி வகுப்புகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும் இவ்வாறு பேசினார் பின்னர் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வட்டார கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் தனித்தனியாக அழைத்து உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்திய ஆய்வுகளின் எண்ணிக்கை எத்தனை கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என சரமாரி கேட்டார் இதற்கு பதில் கூற முடியாமல் பலர் தடுமாறினார் அப்போது ஒரு வட்டார கல்வி அலுவலரிடம் சரமாரியாக ஒரு பள்ளியில் வாரத்தில் எத்தனை பாடவேளைகள் செயல்படுத்தப்படுகிறது அவற்றில் ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை வகுப்புகள் நடத்தப்படுகிறது எனக்கேட்டார் இதேபோல் மற்றொரு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அழைத்து உங்கள் பகுதியில் எத்தனை அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன என கேட்டார் மற்றொருவரிடம் உங்கள் பகுதியில் அதிக மற்றும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளின் பட்டியலை கூறுங்கள் எனக்கேட்டார் இவற்றுக்கு பதில் தெரியாமல் பலர் திணறினார் இதேபோல் மற்றொரு வட்டார கல்வி அலுவலரிடம் இதுவரை எத்தனை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தீர்கள் என கேட்டார் அதற்கு அவர் ஒரு பதிலை கூறினார் உடனே நீங்கள் செல்லும் போது அங்கிருந்த வகுப்பறையில் என்ன பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள் எத்தனை மாணவர்கள் அங்கு இருந்தார்கள் மாணவர்களிடம் ஆசிரியர் எடுத்த பாடங்கள் குறித்து ஏதேனும் கேட்டீர்களா என அடுக்கடுக்காக கேட்டார் இவற்றுக்கு பதில் அளிக்க முடியாமல் அந்த அலுவலர் திணறினார்.
*இதனால் கடும் அதிருப்தியடைந்த தொடக்கக்கல்வி இயக்குநர் முத்து பழனிச்சாமி மீண்டும் பேசியதாவது நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களால் சரிவர பதில் கூற முடியவில்லை அப்படி என்றால் நீங்கள் ஆய்வுக்கு செல்லும் பள்ளியில் என்னதான் கேள்வி கேட்டிருப்பீர்கள் உங்கள் வருகையை முன்கூட்டியே தெரிவித்து விட்டு சென்றீர்களா எக்காரணம் கொண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் திடீரெனதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார் தொடக்கக்கல்வி இயக்குநரின் கேள்விகளுக்கு சரிவரப் பதில் கூற முடியாமல் தவித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CEO/DEO/SPD
4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் கடும் அதிருப்தி! Read More
4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் கடும் அதிருப்தி! Read More
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.