நாளை பள்ளிகளை திறந்துவைக்க தொடக்க கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 07, 2019

Comments:0

நாளை பள்ளிகளை திறந்துவைக்க தொடக்க கல்வித்துறை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாளை விடுமுறை நாளாக இருந்தாலும், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறந்து, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் - தொடக்க கல்வித்துறை உத்தரவு. CLICK HERE TO READ MORE DETAILS விஜயதசமியன்று அங்கன்வாடி மைய கேஜி வகுப்பில் 3 வயது குழந்தைகளை சேர்க்கலாம் தமிழ்நாடு முழுவதும் விஜயதசமி நாளில், 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் தொடக்க வகுப்புகளில் சேர்க்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விஜயதசமி நாள் அன்று, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 8 ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடிகளில் KG வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 3 வயது பூர்த்தியடைந்த தங்கள் குழந்தைகளை அன்றைய தினத்தில், அருகாமையில் உள்ள KG வகுப்புகளிலும் 5 வயது பூர்த்தியான குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் சேர்க்கலாம் என்றும், விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை ஏதும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விஜயதசமி நாளில், 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் KG வகுப்புகளுக்கும், 5 வயது முழுமை பெற்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சேர்க்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 8 ந் தேதி விஜயதசமியன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்றலை தொடங்கி வைக்க உகந்த நாளாக கருதுகிறார்கள். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடிகளில் KG வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனவே அன்றைய தினம் பெற்றோர் 3 வயது பூர்த்தியடைந்த தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் KG வகுப்பிலும், 5 வயது பூர்த்தியான குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் சேர்க்கலாம் என்றும், விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை ஏதும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews