ஒரு தகவலை அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில் வாட்சப் புதிய சோதனையை மேற்கொண்டுள்ளது. வதந்தி பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வாட்சப் மேற்கொண்டு வருகிறது.
வாட்சப்பில் பரவும் வதந்தியால் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கும்பலின் தாக்குதலால் எந்தவித குற்றமும் புரியாதவர் கூட பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முழு முதற் காரணம் வாட்சப்பில் பரப்பப்படும் வதந்திதான். எனவே வாட்சப்பில் பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வாட்சப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஃபார்வேர்டு தகவல் என்பதை காட்டும் வசதி கொண்டு வரப்படும் என அரசிடம் வாட்சப் உறுதியளித்திருந்தது. ஆனால் வேறு என்ன வசதியை ஏற்படுத்தி தரப் போகிறீர்கள் என்று வாட்சப் நிறுவனத்தை மத்திய அரசு வினவியிருந்தது.
இந்நிலையில் ஒரு தகவலை அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில் வாட்சப் நிறுவனம் புதிய சோதனையை மேற்கொண்டுள்ளது. வதந்தி பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வாட்சப் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் மக்கள் வாட்சப்பை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் நாள்தோறும் ஏகப்பட்ட மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்கின்றனர். தங்களுக்கு வரும் மெசேஜ்கள் உண்மையானது தானா..? அல்லது போலியானதா..? என்பதை கூட கண்டறியாமல் அவர்கள் அப்படியே ஃபார்வேர்டு செய்து விடுகின்றனர். உலகில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் அதிக மெசேஜ்கள் ஃபார்வேர்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.kaninikkalvi.
இந்நிலையில் ஒரு மெசேஜ்ஜை 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வசதியை வாட்சப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. மேலும் அது ஃபார்வேர்டு மெசேஜ் என்கிற குறிப்பும் நமக்கு தெரிந்துவிடும். இதன்மூலம் பலபேருக்கு மெசேஜ் ஃபார்வேர்டு செய்வது தடுக்கப்படும். மேலும் 5 பேருக்கு ஒரு மெசேஜை ஃபார்வேர்டு செய்த பின் மீண்டும் ஃபார்வேர்டு செய்ய முயற்சித்தால் அந்த பட்டன் இயங்காது.
இதன்மூலம் போலி தகவல்கள் தேவையில்லாமல் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்பது வாட்சப் நிறுவனத்தின் திட்டம். விரைவில் இந்த சோதனை முழுமையான அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.