School Morning Prayer Activities - 30.07.2018 ( Kaninikkalvi's Daily Updates... ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 30, 2018

Comments:0

School Morning Prayer Activities - 30.07.2018 ( Kaninikkalvi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பழமொழி :
A stitch in time saves nine
வருமுன் காத்தல் சாலவும் நன்று

பொன்மொழி :
இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன் .

இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
1.ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர்
விடை: டாகடர் ராதாகிருஷணன்
2 மக்களவையின் பெரும்பாண்மை கட்சியின் தலைவர்
விடை: பிரதமர்

நீதிக்கதை :
நரியும் கொக்கும் | The Fox And The Stork - Short Story

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.
அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது. நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது.

அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது. கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை. நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது.

கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது . கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது. செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது.

நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது. அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது. அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது.

கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை. குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது. அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.

நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது. அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

இன்றைய செய்தி துளிகள் :
1.மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் வெளிநாடுகளுக்கு பயணிக்க புதிய திட்டம்: விரைவில் அறிமுகம்
2.டெல்லியில் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்பு: அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம்
3.இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
4.தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், அவற்றை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை' என சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தல்.
5.குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகள போட்டியில், தமிழக வீரர் கோகுல் தங்கப்பதக்கம் வென்று சாதனை


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews