பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்லவேறு கட்டுப்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 29, 2018

Comments:0

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்லவேறு கட்டுப்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


பள்ளி மாணவர்கள், மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்: பள்ளியில் நடக்கும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். குழந்தையின் உடல்நலம் குறித்த விபரங்களை, வகுப்பு ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து, அவ்வப்போது, வகுப்பு ஆசிரியரிடம் ஆலோசிக்க வேண்டும்.குழந்தைகளின் நடை மற்றும் பாவனைகளை, பெற்றோர், தினமும் கண்காணிப்பது அவசியம். அதேபோல், பிள்ளைகள், மொபைல் போன், கணினி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது.மாணவர்கள், பள்ளி உடமைகளை பாதுகாக்க வேண்டும். தேர்வு நாட்களில் விடுமுறைகள் எடுக்கக் கூடாது. நீண்ட விடுப்பு எடுக்க, மருத்துவ சான்றிதழ் அவசியம். பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வர அனுமதி இல்லை. விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்து வரக் கூடாது. கூர்மையான மற்றும் கனமான பொருட்களை பயன்படுத்தி, ஆபத்தான முறையில் விளையாடக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யோகா கட்டாயம்!
பள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
* முற்பகலில், நான்கு பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். மதிய உணவுக்கு முன், யோகா வகுப்பு கட்டாயம்
* எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 10 நிமிடம்; 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 15 நிமிடமும் யோகா பயிற்சி அவசியம்

* அதேபோல், ஒழுக்கம், சுற்றுச்சூழல், சுகாதார கல்வி தொடர்பான செயல்பாடுகளும், அவசியம் போதிக்கப்பட வேண்டும்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews