இன்ஜினியரிங் தொழிற்கல்வி பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதன்படி இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம், 42 இணைய சேவை மையங்களில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி தொடங்கி ஜூன் 2ம் தேதி முடிந்தது. அதில் 1,59,631 பேர் அரசு ஒதுக்கீடு இன்ஜினியரிங் இடங்களில் சேர விண்ணப்பித்தனர். கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 1,04,453 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்நிலையில் ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவின்கீழ் (வொக்கேசனல்) விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.annauniv.edu, www.tnea.ac.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.