ஜூலை 31க்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்கும்படி வருமானவரித்துறை அறிவித்துள்ளது. வருமானவரி கணக்கை அதற்குரிய நாளாக 31க்குள் தாக்கல் செய்வோருக்கு அபராதம் ஏதுமில்லை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்து டிசம்பர் 31க்குள் கணக்கு தாக்கல் செய்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
வரி செலுத்துவோர் மீது நம்பிக்கை உள்ளதாகவும் அனாவசியமாக யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை என்றும் வருமான வரி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பெரும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்திருந்தால் அதனைத் தவறாமல் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும் தவறான தகவல்களுடன் தாக்கல் செய்தாலும் தண்டனை மற்றும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.