சூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1223 – எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான். 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர். 1865 – எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர். 1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது. 1933 – ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன. 1948 – இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார். 1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார். 1965 – மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது. 1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர். 1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. 1976 – கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது.. 1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது. 1995 – MP3 பெயரிடப்பட்டது. 1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன. 2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார். 2007 – ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
பிறப்புகள்
1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918) 1913 – ஜெரால்ட் ஃபோர்ட், 38வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (இ. 2006) 1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007) 1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர் 1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர் 1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011) 1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989) 1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர் 1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி 1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர் 1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி 1987 – சாரா கேனிங், கனடிய நடிகை
இறப்புகள்
1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788) 2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876) 2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919) 2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)
சிறப்பு நாள்
பிரான்ஸ் – பாஸ்டில் நாள் (1789)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.