10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் 17 தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிந்துவிடும் என்றும் அதன்பிறகு காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறைஅதிகாாி தொிவித்துள்ளாா்.காலாண்டு விடுமுறை முடிந்துமீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
மேலும் இந்த அட்டவணையானது உறுதிபடுத்தப்படாத நிலையில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட வாய்புள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தாள் இல்லாததால். காலாண்டு தேர்வும் ஒரேதேர்வாக நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.