சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் 3 ஆண்டு படிப்பாக இருந்த பி.எஸ்.புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை ஐஐடி மெட்ராஸ் தற்ேபாது 4 வருட படிப்பாக மாற்றியுள்ளது. சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் என்ற 3 வருட படிப்பை, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என மாற்றி 4 ஆண்டு பட்டப் படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணி பயிற்சியோ, ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில், தற்போது 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 115 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2022ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.itm.ac.in என்ற இணையமுகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews