இன்று நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (STET) வழக்கின் விவரம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (STET) முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடை உத்தரவு 2026 ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🌀வெயிட்டேஜ் மதிப்பெண் (Weightage mark) வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு கூடுதல் அவகாசம் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
🌀வேறு சிலர் தாக்கல் செய்த புதிய மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
🌀அடுத்தகட்ட விசாரணை 2026 ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும்.
🌀 வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 🌀இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தமிழ்நாடு அரசு அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
📢📢📢 முக்கிய அறிவிப்பு 📢📢📢
⚖️ உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இயக்கங்களின் சார்பில், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர் சகோதரர்கள் திரு. S. பாலமுருகன், திரு. ஆ. சுப்பிரமணியன், திரு. க. இராஜேஸ்வரன், திரு. க. மணிமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
📌 வழக்கின் முக்கிய கோரிக்கைகள்:
✅ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்பில்லாத TET Paper-I-இல் இருந்து விலக்கு / நிவாரணம் வழங்குதல்.
✅ 9 & 10 ஆம் வகுப்புகளுக்கு தொடர்பில்லாத TET Paper-II-இல் இருந்து விலக்கு / நிவாரணம் வழங்குதல்.
✅ 6–8 வகுப்புகளில் கற்பிக்கும் பாடத்திற்கு தொடர்பில்லாத பாடங்களில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தை நீக்குதல்.
✅ பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சம மதிப்பெண் தளர்வு வழங்குதல் அல்லது TET-க்கு இணையான பணியிடைப் பயிற்சி வழங்குதல்.
✅ மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண வல்லுநர் குழு அமைத்தல்.
⚖️ இவ்வழக்கு, நீதிமன்ற அறை எண் 07-ல் மாண்புமிகு நீதியரசர் மும்முனேனி சுதீர்குமார் அவர்கள் முன்னிலையில் 20-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.
👨⚖️ ஆசிரியர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு. பன்னீர்செல்வம் ஆஜராகினார்.
🏛️ அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், TRB சார்பில் வழக்கறிஞர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராகி வாதிட அனுமதி கோரினார்.
✅ இதனை ஏற்ற மாண்புமிகு நீதியரசர் அவர்கள், வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.
⚖️ பிற்பகல் 2.15 மணிக்கு:
🔹 TRB தரப்பில், உச்சநீதிமன்றம் மற்றும் NCTE உத்தரவுகளின் அடிப்படையிலேயே சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படுவதாகவும், எனவே வழக்கை தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
🔹 அதற்கு பதிலளித்த ஆசிரியர்கள் தரப்பின் மூத்த வழக்கறிஞர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள்:
✅ 6–8 வகுப்பு ஆசிரியர்களுக்கு Paper-I நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை.
✅ 9–10 வகுப்பு ஆசிரியர்களுக்கு TET நடத்துமாறு உச்சநீதிமன்றமோ, NCTE-யோ உத்தரவிடவில்லை.
✅ மாநில அரசு பாடத்திட்டத்தை குறைக்கவோ, மதிப்பெண் தளர்வு வழங்கவோ முடியாது என்று NCTE எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
✅ எனவே, வழக்கை ஏற்று, ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
🎯 ஆசிரியர்கள் தரப்பின் வாதத்தை ஏற்ற மாண்புமிகு நீதியரசர் அவர்கள்:
📌 தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர்
📌 பள்ளிக்கல்வி இயக்குநர்
📌 SCERT இயக்குநர்
📌 TRB உறுப்பினர்-செயலர்
*ஆகியோர் 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 03.08.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார்.*
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. பொதுப்பிரிவு ஆசிரியர்களுக்கு மதிப்பெண் தளர்வு அளிப்பது குறித்த கொள்கை முடிவை அறிவிக்க அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (STET) முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது, ஏனெனில் பொதுப்பிரிவு ஆசிரியர்களும் தகுதி மதிப்பெண் தளர்வு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர். பிற சமூகத்தினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கும் 60%-லிருந்து 55%-ஆகத் தளர்வு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் வரை இந்தத் தடை தொடரும். 1. வழக்கில் நடைபெற்ற முக்கிய விவாதங்கள் & நிகழ்வுகள்
பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் சலுகை கோரிக்கை:
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (Special TET), பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்குக் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் சலுகை அளிக்கப்பட்டதைப் போல, பொதுப் பிரிவைச் சேர்ந்த (General Category) ஆசிரியர்களுக்கும் தகுதி மதிப்பெண்ணை 60%-லிருந்து 50%-ஆகக் குறைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசின் கொள்கை முடிவு பற்றிய விளக்கம்:
விசாரணையின் போது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் தளர்த்தல் தொடர்பான கொள்கை முடிவு (Policy Decision) எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
🏛️ 2. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை:
அரசு இதுகுறித்து தெளிவான கொள்கை முடிவை எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கும் வரை, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை (STET Results) வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு & சிறப்புத் தேர்வு வாய்ப்பு:
பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்ச்சி பெற வாய்ப்பளிக்கும் வகையில் குறைந்தது இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளை எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும், அதன்ப பிறகே நடுநிலைப்பள்ளி/உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
📌 3. அடுத்தகட்ட நடவடிக்கைகள் & எதிர்பார்ப்புகள்
அரசு தரப்பில் தகுதி மதிப்பெண் குறைப்பு தொடர்பான உறுதியான தகவல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும்.
வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.