தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று முதல் மார்ச் 25 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்: கல்வித்துறை அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 09, 2022

Comments:0

தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று முதல் மார்ச் 25 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்: கல்வித்துறை அதிரடி

தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இயக்கம் மூலம் இன்று முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தேர்ச்சி பெறாவிட்டால் தேர்ச்சி பெறும் வரை அதே பயிற்சியை ஆசிரியர்கள் பெறவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்பது எப்படி?

முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித்திட்ட மாநில இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியானது, வீடியோ பாடமாகவும், ஆன்லைன் வழி மதிப்பீடாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை ஆசிரியர்கள் பெற்றால் மட்டுமே சான்றிதழ் பெற முடியும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெறும் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக 12 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு மார்ச் 25 ஆம் தேதி பயிற்சி நிறைவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews