Breaking

Monday, July 20, 2026

தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் Distance Education: Applications accepted until September 15.



மாநில அரசு பல்​கலைக்​கழக​மான தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக் கல்வி திட்​டத்​தின் வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ள​மா,முதுகலை டிப்​ளமா மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.

பள்​ளி,கல்​லூரி கல்​வியைத் தொடர முடி​யாதவர்​கள், பணிபுரி​யும் நபர்​கள், இல்​லத்​தரசிகள், மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் உயர்​கல்​வியை நெகிழ்வு முறை​யில் தொடர விரும்​புவோர் அனை​வருக்​கும் தொலை​தூரக் கல்வி படிப்​பு​கள் வரப்​பிர​சாத​மாக அமை​கின்​றன. இந்​நிலை​யில், 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. தொலை​தூரக் கல்வி படிப்​பு​களில் சேர விரும்​புவோர் செப்​டம்​பர் 15-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை www.tnou.ac.in என்ற இணை​யதளத்​தில் அறிந்​து​கொள்​ளலாம் என தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜி.ஆர்​.செந்​தில் குமார் தெரி​வித்​துள்​ளார்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தொலைதூரக் கல்விப் பணியக (DEB) வழிகாட்டுதலின்படி, தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை பெற செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (TNOU), பாரதியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் 2026-2027 கல்வியாண்டின் ஜூலை/ஆகஸ்ட் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளன

முக்கியக் குறிப்பு: தொலைதூரக் கல்வியில் இணைய விரும்புபவர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகம் மற்றும் பாடப்பிரிவு UGC-DEB அங்கீகாரம் பெற்றவையா என்பதை UGC-DEB இணையதளத்தில் சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியமாகும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog