Breaking

Friday, April 01, 2022

கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து மாதிரிப் பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வரின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளியைப் பார்வையிட்டேன். தில்லியில் அமைக்கப்பட்டுள்ளதைப்போன்று தமிழகத்திலும் மாதிரிப் (மாடர்ன்) பள்ளிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடக்க விழாவிற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் தில்லி மக்கள் சார்பாக கேஜரிவால் கலந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog